செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு... சின்னத்திரையில் மீண்டும் வேலன் தொடர் குழந்தை நட்சத்திரம்!

90களின் காலக்கட்டத்தில் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரகர்ஷிதா 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில் நடிக்கவுள்ளார்.

DIN

90களின் காலக்கட்டத்தில் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரகர்ஷிதா, 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில் நடிக்கவுள்ளார்.

பிரகர்ஷிதா சன் டிவியில் ஒளிபரப்பான வேலன், ராஜ ராஜேஷ்வரி உள்ளிட்ட பக்தி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பிறகு ரஜனிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பிறகு, சினிமா, சின்னத்திரை என்று எதிலும் தோன்றாத பிரகர்ஷிதா,  18 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய  தொடரொன்றில் நடிக்கவுள்ளார். இத்தொடரில் நடிகை ராதிகாவுடன் இணைந்து  பிரகர்ஷிதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரகர்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை ராதிகா உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  மீண்டும் தொடரில் அவர் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT