இமயமலைப் பயணம்... ஆஸ்ரமத்தில் ரஜினிகாந்த்!
இமயமலைப் பயணத்தின் பகுதியாக நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.
நடிகா் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னா் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்வதைத் தவிா்த்து வந்த அவா், ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னா் கடந்த 2019-இல் இமயமலை பயணத்தை மேற்கொண்டாா்.
ஜெயிலா் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, தற்போது மீண்டும் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் 7 நாள்கள் அங்கு தங்கியிருந்து பாபாஜி குகை, கேதா்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளாா்.
இதையும் படிக்க: ஜெயிலர் - முதல்நாள் பிரம்மாண்ட வசூல் சாதனை!
இந்நிலையில், ஆன்மீக தலங்களுக்கு செல்லும் முன் ரஜினிகாந்த் அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன் அவர்களின் ஆன்மீக உரைகளைக் கேட்டு அவரும் சிறப்புரை ஆற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.