செய்திகள்

தனுஷ் 51: நாயகி அறிவிப்பு!

நடிகர் தனுஷின் 51-வது திரைப்படத்தின் கதாநாயகியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

DIN

நடிகர் தனுஷின் 51-வது திரைப்படத்தின் கதாநாயகியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

அடுத்து, தனது 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக படக்குழு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், நாகர்ஜுனா, சாய் பல்லவி, ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்,  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT