செய்திகள்

எதிர்நீச்சலில் ஜீவானந்தம் தொடர்ந்து பயணிப்பாரா? இயக்குநர் தகவல்!

எதிர்நீச்சல் தொடரில் ஜீவானந்தம் கதாபாத்திரம் தொடர்ந்து பயணிக்குமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு இயக்குநர் திருச்செல்வம் பதிலளித்துள்ளார்.

DIN

எதிர்நீச்சல் தொடரில் ஜீவானந்தம் கதாபாத்திரம் தொடர்ந்து பயணிக்குமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு இயக்குநர் திருச்செல்வம் பதிலளித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்தத் தொடரிலுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், டிஆர்பி பட்டியலிலும் எதிர்நீச்சல் தொடர் முக்கிய இடம் வகித்து வருகிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்கள் மூலம் ஆணாதிக்கம், பிற்போக்குத்தன்மை உள்ளிட்டவற்றை கேள்வி கேட்கும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டு எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

தற்போது, இயக்குநர் திருச்செல்வம் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர் ஈஸ்வரியின் (கனிகா) முன்னாள் காதலனாக காண்பித்து கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஜீவானந்தம் தான் ஹீரோவா?  ஈஸ்வரியும் அவரும் இணைவார்களா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்துள்ள திருச்செல்வம், ஜீவானந்தம் கதாபாத்திரம் சில நாள்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்டது. தொடர்ந்து கதையின் முக்கியத்துவம் மற்றும் ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்றவாறு இந்த கதாபாத்திரம் பயணிக்கும். ஆனால் ஜீவானந்தம் கதாபாத்திரம் அதிக நாள்கள் தொடர வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT