செய்திகள்

எதிர்நீச்சல் நந்தினிக்கு பின்னணி குரல் கொடுப்பது யார் தெரியுமா?

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

DIN

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் ஹரிப் பிரியா நடித்துவரும் நந்தினி கதாபாத்திரத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இத்தொடரில், ஹரிப் பிரியா பேசும் வசனம் மற்றும் நகைச்சுவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவரின் பின்னணி குரல் மட்டும் தான். பலரும் ஹரிப் பிரியாவுக்கு பின்னணி குரல் கொடுப்பது யார் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், ஹரிப் பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பலருக்கும் இந்த கேள்வி....நந்தினிக்கு யார் குரல்....அந்த குரல் என்னுடையது தான்” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் நந்தினி கதாபாத்திரத்துக்கு அவர் பின்னணி பேசும் விடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அவரது ரசிகர்கள், எதார்த்த நடிப்பும், இனிமையான குரலும், நந்தினி கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் தருகிறது என்று ஹரிப் பிரியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2கே கேர்ள்... அனுஷ்கா!

ராமரை காணச் செல்கிறேன்:செங்ககோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 08.09.25 |Sengottaiyan | MKStalin

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

அழகான ராட்சஷி... ஜாக்குலின்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT