முகப்பு
செய்திகள்

துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் எப்போது?

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ்  இசையமைத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்சார் செய்யப்பட்ட இந்த டிரைலரின் கால அளவு 2 நிமிடங்கள் 38 வினாடிகள் என்று கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →