கேம் சேஞ்சர் வெளியீடு எப்போது?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்’ படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
இந்தியன் 2 படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. சில முக்கியக் காட்சிகள் மட்டும் எடுக்கபட உள்ளன. தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தை ஆகஸ்ட் 15, 2024-ல் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் - 2 படமும் அடுத்தாண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.