செய்திகள்

அவமானங்களுக்கு நன்றி! காரை கொண்டாடும் சின்னத்திரை நடிகை சம்யுக்தா!!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சம்யுக்தா, சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர். 

DIN


அவமானப்படுத்தியவர்களுக்கும் ஏமாற்றியவர்களுக்கும் துரோகிகளுக்கும் நடிகை சம்யுக்தா நன்றி தெரிவித்துள்ளார். 

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சம்யுக்தா, சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர். 

விஜய் தொலைக்காட்சியின் சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சம்யுக்தா, பாவம் கணேசன் தொடரில் நடித்துள்ளார். 

அதோடு மட்டுமின்றி நிறைமாத நிலவே தொடரிலும் நடித்து அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பெற்றவர்.  கடந்த மார்ச் மாதம் இவர் சக நடிகரான விஷ்ணுகாந்தை திருமணம் செய்துகொள்வதாக அறிவித்ததிலிருந்து சம்யுக்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வந்தது.

இவர்களுக்கு திருமணம் நடைபெற்றாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக சில மாதங்களில் விவாகரத்தும் நடைபெற்றது. இது தொடர்பாக சம்யுக்தா விளக்கமளித்து விடியோ வெளியிட்டிருந்தார். 

விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்திவந்த சம்யுக்தா, தற்போது சுயமாக சம்பாதித்து கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான விடியோவை சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். 

அதில், அவர் சொந்தமாக சம்பாதித்து குடும்பத்துக்காக கார் வாங்க வேண்டும் என்பது பல நடுத்தர மக்களின் கனவு. என்னுடைய முதல் இலக்கை நான் எட்டியுள்ளேன். என்னை அவமானப்படுத்தியவர்களுக்கும், ஏமாற்றியவர்களுக்கும், துரோகம் இழைத்தவர்களுக்கும் என்னை பயன்படுத்திக்கொண்டவர்களுக்கும் பழி வாங்கியவர்களுக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் சம்யுக்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT