செய்திகள்

சூர்யா - சுதா கொங்காரா படத்தின் நாயகி இவரா?

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தின் நாயகியாக பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.

மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சூர்யா - 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் நாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல்! 

அதிதி நடிப்பில் வெளியான விருமன், மாவீரன் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்ததுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் உயர்ந்து ரூ.90.27ஆக நிறைவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

SCROLL FOR NEXT