சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் திருவள்ளூா் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக சித்ராவின் கணவா் ஹேம்நாத் உள்ளிட்டோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இதையும் படிக்க: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு!
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.