செய்திகள்

சின்னத்திரையில் நடிகர் அப்பாஸ்!

நடிகர் அப்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

DIN

நடிகர் அப்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து வி.ஐ.பி, பூச்சூடுவா, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானார்.

2015க்கு பிறகு சினிமா படவாய்ப்பு சரிவர கிடைக்காததால் வெளிநாட்டுக்குச் சென்று, அங்கு வேலை பார்த்து வந்தார். படவாய்ப்பு குறித்து நடிகர் அப்பாஸ் அளித்த பேட்டியானது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளார் மாகாபாவுடன் கலாட்டா காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், நடிகர் அப்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! - முதல்வர் ஸ்டாலின்

வைல்டு ஃபயர்... ஜனனி!

SCROLL FOR NEXT