செய்திகள்

10 கோடி பார்வைகளை கடந்த பையா பட பாடல்: லிங்குசாமி நெகிழ்ச்சி!

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான பையா பட பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. 

DIN

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி-தமன்னா நடிப்பில் கடந்த 2010இல் வெளியான படம் பையா. யுவன் இசையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. 

‘துளி துளி’ எனும் பாடல்தன தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. காதல் பாடல்கள், சோகமான பாடல்கள் நா.முத்துகுமாரின் வரிகளில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் இந்தப் படத்தின் ஓஎஸ்டி (ஒரிஜினல் சவுண்ட் டிராக்) வேண்டுமென கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “இது ஒரு சிறப்பான பாடல். அன்பிற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். 

பையா பட வெற்றிக்குப் பிறகு பையா 2 திரைப்படம் எடுக்க லிங்குசாமி ஆவலாக உள்ளார். இதற்காக ஆர்யா, ஜான்வி கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

முன்னாள் ஊராட்சித் தலைவா் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT