செய்திகள்

தீப்புயல் வருகிறது: அர்ஜுன் தாஸ் குரலில் பவன் கல்யாண் பட டீசர்! 

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் புதிய படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

தெலுங்கின் முன்னணி நடிகளில் ஒருவர் பவன் கல்யாண். தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்து சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண். ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது மார்ச் 2014இல் பவன் கல்யாணால் உருவாக்கப்பட்டது.

2022இல் பீம்லா நாயக் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது  ஹர ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்களில்  அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார். நடிகர் சாய் தரம் தேஜூடன் பவன் கல்யாண் நடித்த ப்ரோ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் பவன் கல்யாணின் அடுத்த படமான ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, எம்ரான் ஹாஸ்மி, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளான செப்.2ஆம் நாள் இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதில் கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் பிரபலமான  அர்ஜுன் தாஸின் குரலில் 72 நொடிகள் இருக்குமாறு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது ‘தே கால் ஹிம் ஓஜி’, ‘தீப்புயல் வருகிறது’ என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் (எக்ஸ்) டிரெண்டிங்கில் உள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

SCROLL FOR NEXT