செய்திகள்

குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்தின் வைரல் விடியோ! 

நடிகர் அஜித்குமார் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. கடந்த மே மாதம் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது.  மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கமெனவும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.  

அஜித் மீண்டும் ஐரோப்பாவில் தன் இருசக்கர வாகனப் பயணத்தைத் துவங்கியுள்ளார். இதனால், விடாமுயற்சி என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், குழந்தைகளுடன் சேர்ந்து அஜித்குமார் சைக்கிள் ஓட்டிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT