செய்திகள்

ஜெயிலர் படத்திலிருந்து ஆர்சிபி ஜெர்ஸி மாற்றப்பட வேண்டும்: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலிருந்து ஆர்சிபி ஜெர்ஸி நீக்கப்பட வேண்டுமென தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தின் இடைவேளை காட்சியில் ரஜினி தனது மருமகளை கிண்டல் செய்த ஒருவரை கழுத்தினை அறுக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதில் அந்த நபர் ஆர்சிபி அணியின் ஜெர்ஸியை அணிந்திருப்பார். ஆர்சிபி அணியின் ஜெர்ஸி தவறான நபருக்கு அணிவிக்கப்பட்டது குறித்து ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தை நாடியது ஆர்சிபி விளம்பரக் குழு. 

இதனை விசாரித்த தில்லி உயர்நீதி மன்றம், “ஆக.1இல் வெளியான ஜெயிலர் படத்தில் ஆர்சிபி அணியின் ஜெர்ஸி பயன்படுத்தப்பட்டுள்ளது. செப்.1ஆம் நாளுக்குள் இந்த காட்சியில் வரும் ஆர்சிபி ஜெர்ஸி நீக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டுமென படக்குழுவிற்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது. ஓடிடி, தொலைக்காட்சிகளிலும் மாற்றப்பட்ட காட்சிகளே ஒளிபரப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளது. 

படக்குழுவும் இந்த மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT