முகப்பு
செய்திகள்

உறுதியாகும் நானி - சிபி சக்கரவர்த்தி கூட்டணி?

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் நானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:55 AM
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் சிபிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 

காரணம், லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து சிபி இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கதை சரியாக இல்லாததால் ரஜினி விலகிக்கொண்டார். 

பின், சிபி சக்கரவர்த்தி  தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களில் தன் கதையை சொல்லி வந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் நானியை வைத்து சிபி படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடைபெற்றது. 

இந்நிலையில்,  சிபி சொன்ன கதை நானிக்கு பிடித்ததாகவும் இருவரும் இணையும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments