செய்திகள்

மங்காத்தா: 12 ஆண்டுகள்!

நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

DIN

நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், அர்ஜூன், த்ரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் மங்காத்தா.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028, சரோஜா, கோவா என்று வரிசையாக அனைத்து படங்களும் ஹிட் அடித்து அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

இந்த நிலையில், திரை வாழ்க்கையில் சிறிய சந்தித்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா படம் பெரும் ‘கம்பேக்’காக அமைத்து ஹிட்டானது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான்.

தொழிலதிபரின் கணக்கில் வராத பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் காவல் ஆய்வாளர் விநாயக் மகாதேவனாக கலக்கியிருப்பார் அஜித்.

கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா.

அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.

நடிகர் அஜித்தை திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற மங்காத்தா படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மங்காத்தா இரண்டாம் பாகத்துக்காக அஜித்தின் ரசிகர்கள் இன்றும் காத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT