செய்திகள்

இயக்குநர் நெல்சன் சம்பளம் இவ்வளவா?

இயக்குநர் நெல்சனின் அடுத்த படத்தின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் நெல்சன், ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நயன்தாரா நடிப்பில் உருவான அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கினார். இதுவும் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. 

அதன்பின், நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கு நெல்சன் ஆளானார். 

தற்போது, நெல்சன் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியுள்ளது. இப்படத்திற்கு நெல்சன் ரூ.22 கோடி சம்பளமாகப் பெற்றார் எனக் கூறுகிறார்கள்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, நெல்சனுக்கு சம்பளமாக ரூ.55 கோடி கொடுக்கவும் அந்நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் வசூலால் நெல்சனின் சம்பளம் அதிவேகமாக உயர்ந்திருக்கிறது! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT