சமந்தா 
செய்திகள்

மையோசைட்டிஸ் இந்தியாவின் தூதரானார் சமந்தா!

மையோசைட்டிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN


மையோசைட்டிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து கோடிக்கான ரசிகர்களைக் கவர்ந்த சமந்தா, சமீபத்தில் மையோசைட்டிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

உடலின் நோய் எதிா்ப்பாற்றலே தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அதைச் சிதைக்கும் நோய்தான் மையோசைட்டிஸ். இந்த நோய் சமந்தாவை பாதித்த பிறகு தான் பலருக்கு பரிச்சயமானது.

இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா, புதிதாக படங்களில் நடிப்பதை தவிர்த்து தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

சில படங்களுக்கு செய்திருந்த முன்பதிவுத் தொகையையும் திருப்பி அளித்து, நடிப்பதிலிருந்து தற்காலிகமாக (ஓராண்டு) ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து தனது தாயுடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ள சமந்தா, அங்கு மையோசைட்டிஸ் நோய்க்காக சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மையோசைட்டிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மையோசைட்டிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், மையோசைட்டிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மையோசைட்டிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT