கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை!

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்ற தகவலை விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்ற தகவலை விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

மீண்டும் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் விஜய் வர்மா, அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

இதுவரை அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப் ஆண்டனி, ஐஷு, கானா பாலா, ஆர்ஜே பிராவோ, அக்‌ஷயா, ஜோவிகா ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக்ஜம் புயலின் காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

SCROLL FOR NEXT