முகப்பு
செய்திகள்

கவினின் ஸ்டார் படத்தின் வெளியீடு எப்போது?

நடிகர் கவின் நடித்து வரும் ஸ்டார் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 டிசம்பர், 2023 at 8:21 PM
பகிர்:

நடிகர் கவின் நாயகனாக நடித்து வரும் ஸ்டார் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisement

முன்னதாக யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளையொட்டி ஸ்டார் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது.

இந்த நிலையில், ஸ்டார் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பிப். 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.