அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் 
செய்திகள்

அபிஷேக் பச்சனை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்?

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

DIN

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய், 1997ஆம் ஆண்டு ‘இருவர்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம்வந்த ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகனும் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார்.

இதற்கிடையே, அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விரைவில் பிரிய இருப்பதாகவும் பாலிவுட்டில் சமீப காலமாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் அபிஷேக் பச்சன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் கையில் திருமண மோதரம் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமானதில் இருந்து அபிஷேக் பச்சன் எந்த பொது நிகழ்வுகளிலும் மோதிரம் இல்லாமல் கலந்து கொண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், விவகாரத்து சர்ச்சை குறித்து அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ஜோடி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

SCROLL FOR NEXT