செய்திகள்

ரூ.700 கோடியை நெருங்கும் அனிமல்! 

சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவான அனிமல் படத்தின் 9வது நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

DIN

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்தது. திருவிழா அல்லாத நாள்களில் வெளியாகி இவ்வளவு வசூலித்த படங்களில் இதுதான் முதன்முறை என படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. படம் 2வது நாளில் ரூ.236 கோடியும் 3வது நாளில் ரூ. 356 கோடியும் வசூலித்துள்ளது. இதனை பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி என படக்குழு வர்ணித்தது. 

நடிகர் அல்லு அர்ஜுன் படத்தினை கிளாசிக் என்று புகழ்ந்துள்ளார். ரசிகர்களின் பேராதரவில் சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் 9வது நாளின் முடிவில் ரூ.660. 89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடியை ஞாயிற்றுக்கிழமைக்குள் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த வாரமும் இதே வேகத்தில் ஓடினால் நிச்சயமாக 1000 கோடி ரூபாயை வசூலிக்குமென ரன்பீர் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

கல்லூரி மாணவரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: மூவா் கைது

நாகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

சுட்டுக் கொல்லப்பட்ட திமுக பிரமுகா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு குற்றவாளிகளை கைது செய்ய போலீஸாா் தீவிரம்

மாடு முட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT