கமல்ஹாசன் 
செய்திகள்

பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7-வது முறையாக நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.

பிக் பாஸ் தமிழை பொறுத்தவரை கடந்த 6 சீசன்களாக கமல் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். பலமுறை கமலின் முடிவுகளை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் கமலுக்கு பெரியளவு வருமானம் கிடைத்தாலும், வார இறுதி நிகழ்ச்சிகளில் தனது அரசியல் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு மேடையாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார்.

ஆனால், பிக் பாஸ் சீசன் 7-ல் கமலின் பல்வேறு முடிவுகள் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

உதாரணமாக பிரதீப் ஆண்டனியை பேசவிடாமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது, நிக்சனின் கொலை மிரட்டலை பெரிது படுத்தாமல் எச்சரிக்கையோடு நிறுத்தியது, வினுஷா குறித்து நிக்சன் பேசிய சர்ச்சை கருத்தை ஆரம்பத்திலேயே கேட்காமல் விட்டது போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கமலுக்கு எதிராக இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த சீசனோடு கமல் விலகவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.

இருப்பினும், கமல் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT