செய்திகள்

இணையத்தில் வைரலாகும் கவினின் ஸ்டார் படத்தின் முதல் பாடல்

DIN

நடிகர் கவின் நாயகனாக நடித்து வரும் ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஸ்டார் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பிப். 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடலான உனக்கென்ன நீ ஹீரோ என்ற பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலை மதன்கார்கி எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT