முகப்பு
செய்திகள்

ஆதி - லட்சுமி மேனனின் சப்தம்: முதல் பார்வை போஸ்டர் வெளியானது!

ஆதி மற்றும் லட்சுமி மேனம் நடித்துள்ள  சப்தம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

ஆதி மற்றும் லட்சுமி மேனம் நடித்துள்ள  சப்தம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் அறிவழகன், அவர் இயக்கிய முதல் படமான ஈரம் படத்தின் கதாநாயகன் ஆதியுடன்  மீண்டும் இணைந்துள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து சப்தம் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ஆதியின் பிறந்த நாளையொட்டி சப்தம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →