செய்திகள்

ஓடிடியில் கூச முனுசாமி வீரப்பன்!

வீரப்பன் குறித்த ஆவணப்படமான ‘கூச  முனுசாமி வீரப்பன்’ ஓடிடியில் வெளியாகியுள்ளது

DIN

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது.

ஆர்.வி.பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம்  டிச.8 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. மிக்ஜம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டதால்,  இதன் வெளியீட்டை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த ஆவணப்படம் இன்று வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், வீரப்பனை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தொடர்பாக ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன் (The Hunt For Veerappan)’ ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT