செய்திகள்

இனி இதைச் செய்யக் கூடாது: லோகேஷ் கனகராஜ்

தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடித்துள்ள படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். 

கடந்த டிச.2 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்'  படத்தின் டீசரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் டீசரின் இறுதியில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இளையராஜாவின் ’என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலின் பின்னணி இசையை அடிதடி காட்சிகளுடன் சேர்த்திருந்தது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், இப்படத்திற்கான புரோமோஷனுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் குமார் இணைந்து பேட்டியளித்துள்ளனர்.

அதில் பேசிய லோகேஷ் கனகராஜ், “ லியோ படத்தின் இரண்டாம் பாதி குறித்து விமர்சனங்கள் எழுந்ததை ஏற்றுக்கொள்கிறேன். இனி இதுபோல் ஆகிவிடக்கூடாது என்பதால், வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டு படத்தை எடுக்கக் கூடாது என முடிவு செய்திருக்கிறேன். இறுதி நேர அழுத்தங்கள் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். இவ்வளவு வேகம் தேவையில்லை. நிதானம் தேவை என நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

SCROLL FOR NEXT