செய்திகள்

’மிஸ்டர் சந்திரமௌலி..’ சங்கரன் காலமானார்!

இயக்குநரும் நடிகருமான ரா.சங்கரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

DIN

நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

1974-ல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தேன் சிந்துதே வானம் , துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட 8 படங்களை இயக்கியுள்ளார்

பொண்டாட்டி தேவை, தாயம்மா, சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாயகனான கார்த்தி, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரைக் கூப்பிடும் காட்சி மிகப் பிரபலம். 

சில நாள்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இயக்குநர் பாரதிராஜா, “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

வெளிநாடு செல்லும் ராசி எது? வார பலன்கள்!

இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்னைகளுக்கே முன்னுரிமை: முதல்வர் ஒய். கெம்சந்த் சிங்

யு19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பேட்டிங்!

டிடிஎஃப் வாசனின் ஐபிஎல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT