செய்திகள்

மனைவி போலிஸில் புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!

சின்னத்திரை நடிகரான ராகுல் ரவி, அவரது மனைவி காவல் துறையினரிடம் அளித்த புகாரால் தலைமறைவாகி இருக்கிறார்.

DIN

சின்னத்திரை நடிகரான ராகுல் ரவி, அவரது மனைவி காவல் துறையினரிடம் அளித்த புகாரால் தலைமறைவாகி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ராகுல் ரவி. இவர் தொடர்ந்து சாக்லெட் தொடரில் நடித்தார். கரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கண்ணான கண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடந்த 2020-ல் ராகுல் ரவி தான் காதலித்த லட்சுமி நாயர் எனபவரை திருமணம் செய்துகொண்டார்.

ராகுல் ரவி.

இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், திருமணத்துக்குப் பிறகு ராகுல் ரவி மற்றும் லட்சுமி நாயரின் ரீல்ஸ் மற்றும் விடியோக்கள் டிரெண்டாகியது.

இதைத் தொடர்ந்து, ராகுல் ரவி மற்றும் லட்சுமி நாயருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், ராகுல் ரவிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லட்சுமி நாயர்,  ராகுல் ரவி மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே ராகுல் ரவி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரிய இருந்த நிலையில், முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதனால் இவர் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT