முகப்பு
செய்திகள்

எல்ஐசி - பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.

தற்போது,  ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நெஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →