முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி - அஜித் எடுத்த புகைப்படங்கள்!

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

 இப்படப்பிடிப்பில் பங்குபெற்ற நடிகர் அர்ஜுன், நேற்று (டிச.13) இன்ஸ்டாகிராமில் தன் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்து ‘இந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது என தெரியுமா’? எனக் குறிப்பிட்டார். உடனே, ரசிகர்கள் இது அஜித் எடுத்த படம் என பின்னூட்டம் இட்டனர். 

இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்துள்ளார். அவை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இப்படத்தில், மங்காத்தா திரைப்படத்துக்குப் பின் நடிகர்கள் அஜித்தும் அர்ஜுனும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.