செய்திகள்

என் மனைவிக்கு ஓசிடி நோய் பாதிப்பு இல்லை: பிரபல நடிகர் 

என் மனைவிக்கு ஓசிடி நோய் பாதிப்பு இல்லை என்று பிரபல நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

என் மனைவிக்கு ஓசிடி நோய் பாதிப்பு இல்லை என்று பிரபல நடிகர் சாந்தனு பாக்கியராஜ்  நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

வேட்டிய மடிச்சு கட்டு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாந்தனு பாக்கியராஜ். இதைத் தொடர்ந்து, 2008-ல் சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனமாக அறிமுகமானார்.

தொடர்ந்து கண்டேன், அம்மாவின் கைபேசி, இராவண கோட்டம், பாவக் கதைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த மை3 வெப் தொடர் ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

சாந்தனு பிரபல நடன இயக்குநர் ஜெயந்தியின் மகளான தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் இவர்கள் பதிவிடும் ரீல்ஸ் விடியோக்களை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இந்த நிலையில், நடிகர் சாந்தனு பாக்கியராஜ் அவரது மனைவி கீர்த்தி குறித்து நகைச்சுவையாக பதிவிட்டு விடியோ ஒன்றை இண்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில், “என் மனைவிக்கு ஓசிடி நோய் பிரச்னை இல்லை. நாங்கள் கொஞ்சம் முரண்பாடான ஜோடி” என சாந்தனு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அதற்கு சிபி சத்யராஜ் “சேம் பிலட்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT