முகப்பு
செய்திகள்

சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:27 PM
பகிர்:

இயக்குநர் பா. ரஞ்சித் படங்களில் இசையமைத்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மிகவும் பிரபலமடைந்தார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அவரது அவர்களது கூட்டணி அத்தனையும் மெகா வெற்றி பெற்றது. 

பின்னர் அறிவு- தீ இணைந்து பாடிய எஞ்சாமி பாடலில் யாருக்கு உரிமை என பிரச்னை எழுந்தது. இதனால் பா.ரஞ்சித்- சந்தோஷ் நாராயணனுக்கு மன கஷ்டம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதனை தொடர்ந்து பா. ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் இல்லாமல் நட்சத்திரம் நகர்கிறது என்ற புதிய படத்தினை வெளியிட்டார். 

தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். பிப்ரவரியில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “தீயாக இருக்கட்டும். நீயே ஒளி. வாழ்த்துகள் சந்தோஷ்” எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு சந்தோஷ் நாராயணன், “நன்றி மாமே. நம்ம படத்தின் பாடல்கள் அதிகமாக இருக்கும். அப்படியே தங்கலான் அப்டேட் கூறுங்கள்?” எனப் பதிவிட்டுள்ளார். 

ரசிகர்கள் ஒரு வழியாக பிரச்னை முடிவுக்கு வந்ததாக மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஏனெனில் சார்பட்டா பரம்பரை 2 படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கும் சந்தோஷ் இசையமைப்பாரா என ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.