செய்திகள்

நல்ல விஷயங்கள் நேரமெடுக்கும்: தாமதமாக வெளியான சலார் படத்தின் 2வது டிரைலர்!

பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் 2வது டிரைலர் மிகவும் தாமதமாக வெளியானது. 

DIN

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல்  நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. 

சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்திருந்தது. 

டிரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.  2 மணி நேரம், 55 நிமிஷங்கள், 22 நொடிகள் ரன்னிங் டைமாக உருவாகியிருக்கிறது. தீவிரமான சண்டைக்கு தயாராகுங்கள் என படக்குழு கூறியுள்ளது. 

5 மொழிகளிலும் முதல் பாடல் டிச.13இல் வெளியானது. தமிழில் ஆகாச சூரியன் எனும் பெயரில் வெளியானது.

படத்தின் இறுதி வசனம் என்றழைக்கப்பட்ட ‘ரிலீஸ் டிரைலர்’ இன்று (டிச.18) காலை 10.42க்கு வெளியாவதாக இருந்தது. மதியம் 2 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்த நிலையில் அதுவும் கால தாமதமாக வெளியாகியது. 

“நல்ல விஷயங்கள் நேரமெடுக்கும்; ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கவில்லை“ என படக்குழு தாமதத்துக்கு பதிலளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT