செய்திகள்

நாயகனா? வில்லனா? சிறுவனைக் கொன்ற வீரப்பன்!

கூச முனுசாமி வீரப்பன் ஆவணப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

DIN

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது.

ஆர்.வி.பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த ஆவணப்படத்தின் உருவாக்கம் மற்றும் இதுவரை பார்வைக்கு வராத வீரப்பனின் நேர்காணல் விடியோக்கள் ஆகியவை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

6 எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரில் குறிப்பிட்ட எபிசோட் ஒன்றில், தன் குழுவினர் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்த ஒற்றராக (இன்ஃபார்மர்) செயல்பட்ட ஒருவரை வீடு தேடிச்சென்று சுட்டுக்கொல்வதை வீரப்பனே கூறுகிறார். அதேநேரம், இன்றும் உயிருடன் இருக்கும் பலியானவரின் மனைவி, தன் கணவருடன் சேர்த்து தன் 12 வயது மகனையும் (பழனிச்சாமி) வீரப்பன் சுட்டுக்கொன்றதாக் குறிப்பிடுகிறார்.

நக்கீரன் கோபால் இது தவறில்லையா என வீரப்பனிடம் கேட்டதற்கு, “காட்டிக்கொடுத்தவன் குடும்பத்தில் ஆண் வாரிசு என யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகவே சுட்டுக்கொன்றேன்” எனக் கூறியதைப் பதிவு செய்துள்ளனர்.

வீரப்பனை நாயகனாக நினைத்துப் போற்றிக்கொண்டிருப்பவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? என இணையத்தில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT