செய்திகள்

திருமதி ஹிட்லர் நாயகியுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் புதிய தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.  நினைத்தே வந்தாய் என்ற விஜய் படப் பெயரில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் புதிய தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.  நினைத்தே வந்தாய் என்ற விஜய் படப் பெயரில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடரில் நடிகை 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சில படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராமன். தமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பலரால் அறியப்பட்டவர்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராமன், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன்மூலம் பலதரப்பட்ட மக்களால் அறியப்பட்டார். 

அவ்வபோது விளம்பர மாடலாமவும் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராமன், நினைத்தேன் வந்தாய் தொடர் மூலம் சின்னத்திரையில் முதல்முறையாக அறிமுகமாகவுள்ளார். 

இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது. அதில் பிரிந்த மனைவியைப் பார்த்து தனிமையில் பேசும்படியான காட்சி இடம்பெற்றுள்ளது. அதன்படி இந்தத் தொடர் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னத்திரையில் சிறிய இடைவேளைக்குப் பிறகு காதலை அடிப்படையாக வைத்து முழுநீள தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT