அயலான் 2-வது பாடல்!
அயலான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம்.
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் அயலானில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடலான, 'அயலா அயலா’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நரேஷ் ஐயர், ஹிருதி கட்டானி பாடிய இப்பாடலை விவேக் எழுதியிருக்கிறார்.