முகப்பு
செய்திகள்

இறுதிக்கட்டத்தில் கங்குவா படப்பிடிப்பு!

சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Updated On : 20 டிசம்பர், 2023 at 11:22 AM
பகிர்:


சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி(நடராஜ்) நடிக்கின்றனர். 

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன.

Advertisement

தற்போது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாள்களில் முழுமையாக கங்குவா படப்பிடிப்பு நிறைவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.