விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் டிரைலர்!
விஜய் சேதுபதி நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது. இப்படம் பொங்கல் வெளியீடாக 2024, ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்தது.
இதையும் படிக்க: திருமதி ஹிட்லர் நாயகியுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்!
இந்த நிலையில், மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது.