FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திமுகவுடனான கூட்டணியை உடைக்க விரும்பவில்லை: நாராயணசாமி

திமுகவுடன் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது குறித்து...

Updated On : 27 மார்ச் 2026, 1:02 pm IST
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் திமுகவுடனான கூட்டணியை உடைக்க விரும்பவில்லை என மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளருடன் நாராயணசாமி பேசுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் யோசனை எனக்கும் இருந்தது. மேலும், போட்டியிடும் தொகுதியை அடையாளங் கண்டு, அதற்கான பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன்.

ஆனால், எங்கள் கூட்டணிக் கட்சியான திமுகவும் ஓர் இடம் கொடுக்க வேண்டுமென உறுதியாக இருந்தனர்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, கூட்டணி உடைவதை விரும்பவில்லை என கட்சி மேலிடத்தில் கூறினேன். வலுவான கூட்டணியான காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், கூட்டணியை ஒன்றாக வைத்திருக்க, எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ஏற்பட திமுகவும்- காங்கிரஸூம் நீண்ட நெடிய பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன.

இந்தக் கூட்டணிக்கு புதுச்சேரியில் யாா் தலைமை தாங்குவது என்பதில் பிரச்னை ஏற்பட்டது. தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை தாங்கும். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்று காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் கிரீஷ்சோடங்கா் கூறியிருந்தாா்.

இந்த நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நள்ளிரவு இந்த பிரச்னையில் தொகுதி பங்கீடு இறுதியானது.

summary

I don't want to break the alliance with DMK, says Former CM Narayanasamy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments