திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்கு
நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர், திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில ஆக்கிரமிப்பு புகாரை முதல்வரின் தனிப்பிரிவில் அளித்துள்ளார். அதில், 2024 தேர்தல் பணிமனைக்காக வழங்கிய இடத்தை திருப்பித் தர மறுப்பதுடன், கடந்த 2 ஆண்டுகளாக வாடகையும் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தன்னுடைய நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
புகாரின் அடிப்படையில் நில அபகரிப்பு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் மீது பரங்கிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.