செய்திகள்

சலார் 2-வது பாடல்!

சலார் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

DIN

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம் நாளை ( டிச.22 ) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தில் நடிகர் யஷ் நடித்ததுள்ளதை படத்தில் பணியாற்றிய பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான தீர்த்தா சுபாஷ் என்பவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இப்படம் முதல் நாள் வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு ஆரம்பமாகிறது. மேலும், அம்மாநிலங்களில் டிக்கெட் விலையையும் அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘பல கதையில்’ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT