பிரமிப்பூட்டும் சலார் படத்தின் மேக்கிங் விடியோ!
சலார் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் டிச.22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இணைந்து டிரைலர் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: திட்டம் இரண்டு திரைப்பட பாணி காதல்! தோழியைக் கொன்ற திருநம்பி!
Advertisement
Advertisement
படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. காந்தாரா நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் சலார் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்கள்.
படத்தில் கிராபிக்ஸைவிட நிஜமாகவே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
இதையும் படிக்க: சமூக விழிப்புணர்வு கொண்ட படங்களை தயாரிக்க விரும்புகிறேன்: ‘செவ்வாய்கிழமை’ தயாரிப்பாளர் ஸ்வாதி!
3வது நாலில் ரூ.402 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படக்குழு மேக்கிங் விடியோவினையும் வெளியிட்டுள்ளது. இதனைப் பார்க்கும்போது பிரமிப்பூட்டுவதாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.