செய்திகள்

சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல்!

சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

DIN

சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரம் தொப்பி அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவரது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT