செய்திகள்

தமிழில் சாதனை படைத்த ஹிந்தி மாயாஜாலத் தொடர்!

மொழிமாற்றம் செய்யப்பட்ட ஹிந்தி தொடர், அது முடிந்த அடுத்த ஆண்டே மறுஒளிபரப்பாகவுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

DIN

ஹிந்தி மொழியில் மாபெரும் வெற்றியடைந்த பிசாசினி தொடர் தமிழ் மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.  

வயாகாம்18 நிறுவனத்தின் தமிழ் பொழுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், புதிய அமானுஷ்ய தொடராக பிசாசினி  ஒளிபரப்பானது.

கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பானது. மொத்தம் 114 எபிஸோடுகள் வரை ஒளிபரப்பானது.

இந்தத் தொடர் ராணி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அவள் தன்னிடம் அசாதாரண சக்திகள் இருப்பதை கண்டுபிடித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொண்டு செயல்படுகிறாள். 

அவ்வாறு செய்யும்போது அவள் வாழ்க்கையில் என்னென்ன அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதையாகும். காதல், பழிவாங்குதல் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போட்டி என அனைத்தும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.

டிராமா மற்றும் அமானுஷ்யங்கள் நிறைந்த தொடராக பிசாசினி ஒளிபரப்பானது. ஹிந்தியில் எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழ் ரசிகரகளுக்கு ஏற்ப மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், ஏராளமான ரசிகர்களைக் கவரந்தது. 

இந்தத் தொடரில் முக்கிய வேடங்களில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர் மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒளிபரப்பான நாகினி தொடரைப் போன்று, பிசாசினி தொடருக்கும் ரசிகர்கள் அதிகம். அதனால், தற்போது மீண்டும் பிசாசினி தொடரை மறுஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு பிசாசினி மறுஒளிபரப்பாகவுள்ளது.  மொழிமாற்றம் செய்யப்பட்ட ஹிந்தி தொடர், அது முடிந்த அடுத்த ஆண்டே மறுஒளிபரப்பாகவுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணாடிப் பூவே... ஸ்வேதா டோரத்தி!

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: கரூர் மாவட்ட ஆட்சியர்

பின்னல் வலை வீசி... அந்தாரா!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியா இல்லை!

பார்த்த விழி பார்த்தபடி... ரக்‌ஷா ஷெரின்!

SCROLL FOR NEXT