செய்திகள்

இது அழகான கதை; அதனால்தான் இவ்வளவு நேசிக்கிறீர்கள்: டன்கி 5ஆம் நாள் வசூல்!

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படத்தின் 5ஆம் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் கடந்த டிச. 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 

உலகளவில் வெளியான இப்படம் இதுவரை விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

உலகம்  முழுவதும் ரூ. 58 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் முதல்நாளில் ரூ. 129.6 கோடி வசூலித்தது. டன்கி படம் இதில் 50 சதவிகிதத்தைக்கூட வசூலிக்கவில்லை. ஆக்‌ஷன் அல்லாத படங்களுக்கு இது சகஜம் என விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் 5ஆம் நாளில் படம் ரூ. 256.40 கோடி வசூலித்துள்ளது. படக்குழு இதனை, “இது அழகான கதை; அதனால்தான் நீங்கள் இவ்வளவு நேசிக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது. 

ஆக்‌ஷன் கதைகளுக்கு மத்தியில் ஃபீல் குட் திரைப்படங்களும் வரவேற்க வேண்டுமென விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT