செய்திகள்

கோபி நயினார் படப்பிடிப்பில் விபத்து - லைட்மேன் பலி!

இயக்குநர் கோபி நயினாரின் புதிய பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மின்சார விபத்தில் லைட்மேன் உயிரிழந்தார்.

DIN

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அறம். இப்படத்திற்குப் பின் நயன்தாராவின் மீதான கதாநாயகி பிம்பம் மேலும் உயர்ந்தது. 

அதேநேரம், படத்தின் இயக்குநர் கோபி நயினார் அடுத்ததாக புதிய திரைப்படத்தை இயக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைப் பின் நடிகர் ஜெய்யை நாயகனாக வைத்து ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்கினார்.

தற்போது, அகரன் காலணி என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது லைட்மேன் சண்முகம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பலியானவரின் உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய அதிகாரி கைது!

வார பலன்கள் - மகரம்

யு19 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

SCROLL FOR NEXT