செய்திகள்

இணையத்தில் வைரலாகும் விஜயகாந்தின் ரமணா படக்காட்சி!

விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

DIN

விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி அவரது ரசிகர்கள் விஜயகாந்த் நடித்த  பாடல்கள், வசனங்களை வைரலாக்கி வருகின்றனர். 

அந்த வகையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2002 ஆம் வெளியான ரமணா படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். அதில், இறப்பு சான்றிதழ் பெற்றவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் காட்சி படத்தில் இருக்கும். 

இக்காட்சியை விஜயகாந்த் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், எக்ஸில் விஜயகாந்த் என்ற டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT