அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி!
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘டிமாண்டி காலனி - 2’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்குப் பின், அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
தற்போது, விஜய் சேதுபதி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.